கே.பாக்யராஜின் கதை விவாதம்!

Bookmark and Share

கே.பாக்யராஜின் கதை விவாதம்!

சித்து ப்ளஸ்-2 படத்துக்கு பிறகு படம் இயக்குவதில் இருந்து விலகியிருந்தார் கே.பாக்யராஜ். இந்த நிலையில், வாகை சூடவா, ஒருவர் மீது இருவர் சாய்ந்து உள்பட பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த அவர், துணை முதல்வர் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

அரசியலை நய்யாண்டி செய்யும் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் பாக்யராஜூடன் இணைந்து ஜெயராமும் இன்னொரு ஹீரோவாக நடித்திருக்கிறார். அதையடுத்து, தற்போது மூணே மூணு வார்த்தை உள்பட சில படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வரும் அவர், கதை விவாதங்களிலும் அதிகமாக கலந்து கொண்டு வருகிறார்.

இந்திய அளவில் சிறந்த திரைக்கதை எழுதக்கூடியவர் என்கிற பெயரை பெற்றிருக்கும் பாக்யராஜ், தங்களுடன் கதை விவாதம் செய்தால் தங்கள் கதைக்கு புதிய ஜனரஞ்சகம் கிடைக்கும் என்று இயக்குனர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதனால், இப்போது அவருக்கு போன் செய்து நடிக்க அழைப்பவர்களை விட கதை விவாதத்துக்கு அழைக்கும் டைக்டர்கள்தான் அதிகமாகி விட்டனர். அந்த வகையில், திரைக்குப்பின்னால் இப்போதும் பிசியாகவே இருந்து கொண்டிருக்கிறார் கே.பாக்யராஜ்.

அதேசமயம், தான் கதை விவாதத்துக்கு செல்லும் டைரக்டர்களிடம் தனக்கு நடிக்க சான்ஸ் வேண்டும் என்றும் அவர் நிர்ப்பந்திப்பதில்லையாம். எனக்கு பொருத்தமான வேடங்கள் இருந்தால் மட்டுமே கொடுங்கள். இல்லையேல் அவசியமில்லை என்றும் முன்மொழிந்து விடுகிறாராம் பாக்யராஜ். 


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions