நாடகத்தை மதிக்கும் கே.விஸ்வநாத்!

Bookmark and Share

நாடகத்தை மதிக்கும் கே.விஸ்வநாத்!

கமல்ஹாசன்-ராதிகா நடித்த சிப்பிக்குள் முத்து படத்தை இயக்கியவர் கே.விஸ்வநாத். தெலுங்கில் ஏராளமான படங்களை இயக்கியிருக்கும் இவர், சமீபகாலமாக நடிகராகி விட்டார்.

தமிழில் குருதிப்புனல், முகவரி, காக்கை சிறகினிலே, யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, சிங்கம்-2, லிங்கா ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது கமலின் உத்தமவில்லன் படத்திலும் நடித்திருக்கிறார்.

தற்போது 85 வயதாகும் கே.விஸ்வநாத்திற்கும், மறைந்த கே.பாலசந்தருக்கும் உத்தமவில்லன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுத்திருக்கிறார் கமல். அப்படத்தின் ட்ரைலரில் கூட விஸ்வநாத் நடித்த காட்சியும் இடம்பெற்றிருக்கிறது.

இந்தநிலையில், சமீபத்தில் நடந்த உத்தமவில்லன் ஆடியோ விழாவுக்கு அப்படத்தில் நடித்திருந்த அனைவருமே வந்திருந்தனர் ஆனால், கே.விஸ்வநாத் மட்டுமே வரவில்லை.

காரணம் அன்றைய தினம் நடந்த நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகம் ஒன்றை பார்ப்பதற்காக சென்று விட்டாராம் விஸ்வநாத். அந்த அளவுக்கு நாடகத்துறையில் இருந்து வந்த அவர் இன்றளவும் நாடகத்தை பெரிதாக மதித்து வருகிறாராம்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions