'கஞ்சா' என பெயர் வைப்பதெல்லாம் சரியா...?

Bookmark and Share

'கஞ்சா' என பெயர் வைப்பதெல்லாம் சரியா...?

இன்று ஒரு படத்தின் விளம்பரத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். 'கே 3' என பெயரிடப்பட்டுள்ள ஒரு படத்தின் விளம்பரம்தான் அது. கதிர் கஞ்சா கருப்பு' என்பதன் சுருக்கம்தான் 'கே 3'.

ஒரு படத்தின் பெயரிலேயே 'கஞ்சா' என்ற போதைப் பொருளை வைக்கும் அளவிற்கு தமிழ் சினிமாவின் தரம் தாழ்ந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது. மலையாள இயக்குனர்களும், தெலுங்கு இயக்குனர்களும் தமிழில் வந்து படம் இயக்கினால் கூட அழகிய தமிழ்ப் பெயராக வைக்கும் போது, இங்குள்ளவர்களே இப்படி ஒரு பெயரை வைப்பது கற்பனை வறட்சியையே காட்டுகிறது.

ஏற்கெனவே 'கஞ்சா கருப்பு' என்ற பெயரில் ஒரு நகைச்சுவை நடிகரின் பெயர் இருப்பதையும் இதுவரை யாரும் கண்டு கொள்ளவுமில்லை, அதற்கு எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்கவும் இல்லை.

கொஞ்ச நாளைக்கு அவரும் 'கருப்பு ராஜா' என்று பெயர் மாற்றம் செய்திருந்தார். பின்னர் அதை விட்டுவிட்டு, இப்போதும் 'கஞ்சா' என்பதையும் சேர்த்துத்தான் அழைக்கப்படுகிறார்.

ஒரு திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சி வந்தாலே எச்சரிக்கை வாசகங்கள் இருக்க வேண்டும் என்ற உத்தரவை கடுமையாக கடைபிடிக்கும் தணிக்கைக் குழுவினர் இப்படிப்பட்ட பெயரிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இன்றைய சிறுவர் சிறுமிகளும் தொலைக்காட்சிகளைப் பார்க்கும் போது அது என்ன 'கஞ்சா' என்பதைக் கேட்பதையும் பார்க்க முடிகிறது. ஒரு படத்தின் பெயரிலேயே 'கதிர் கஞ்சா கருப்பு' என வந்தற்கும் தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதையும் படத்தின் விளம்பரத்திலும் பார்க்க முடிகிறது.

அப்படியென்றால் காட்சிகளுக்கு மட்டும்தான் தடையா, காட்சிகளை விட இப்படிப்பட்ட பெயர்கள் மனதில் அழுத்தமாகப் பதிந்து விடுமே...அதற்கு என்ன செய்யப் போகிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions