62-வது தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வான படங்களின் பட்டியல்

Bookmark and Share

62-வது தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வான படங்களின் பட்டியல்

62-வது தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வான படங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேசிய அளவில் சிறந்த படமாக ‘கோர்ட்’ படம் தேர்வாகியுள்ளது. இது மராத்திய படமாகும்.

மேலும் சிறந்த நடிகையாக ‘குயின்’ படத்தில் நடித்ததற்காக கங்கனா ரணாவத் தேர்வாகியுள்ளார். ‘குயின்’ படம் சிறந்த இந்தி திரைப்படமாக தேர்வாகியுள்ளது.

சிறந்த துணை நடிகருக்கான விருது ‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹாவிற்கு கிடைத்துள்ளது. மேலும், சிறந்த பாடலாசிரியர் விருதுக்கு நா.முத்துக்குமார் தேர்வாகியுள்ளார். ‘சைவம்’ படத்தில் இடம்பெற்ற அழகே அழகு என்ற பாடலுக்காக நா.முத்துக்குமார் தேர்வாகியுள்ளார். மேலும் அப்பாடலை பாடிய உத்ரா உண்ணி கிருஷ்ணன் சிறந்த பின்னணி பாடகியாகவும் தேர்வாகியுள்ளார்.

தேசிய விருதுக்கு தேர்வான படங்களின் முழு விவரம் வருமாறு:-

சிறந்த படம் - கோர்ட் (மராத்தி)
சிறந்த நடிகை - கங்கனா ரணாவத் (குயின்)
சிறந்த இந்தி படம் - குயின்
சிறந்த நடிகர் - கன்னட நடிகர் விஜய் (நானு அவனல்ல அவளு)
சிறந்த துணை நடிகர் - பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
சிறந்த இயக்குனர் - ஸ்ரீஜித் முகர்ஜி (சோட்டோஜ் கோனே - பெங்காலி)
சிறந்த பொழுதுபோக்கு படம் - மேரிகோம் (இந்தி)
சிறந்த இசையமைப்பாளர் - விஷால் பரத்வாஜ் (ஹைடர்)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர் - கோபி சுந்தர் (1983-மலையாளம்)
சிறந்த பின்னணி பாடகர் - சுக்வீந்தர் சிங் (ஹைடர் - பிஸ்மில் பாடல் - இந்தி)
சிறந்த பின்னணி பாடகி - உத்ரா உண்ணி கிருஷ்ணன் (சைவம்-அழகே அழகு பாடல்)
சிறந்த சுற்றுச்சூழல்/பாதுகாப்பு படம் - ஓட்டல் (மலையாளம்)
சிறந்த பிராந்திய மொழி திரைப்படம் - குற்றம் கடிதல் (தமிழ்)
சிறந்த பாடலாசிரியர் - நா.முத்துக்குமார் (சைவம்)
சிறுவர்களுக்கான சிறந்த படம் - காக்கா முட்டை
சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் - ரமேஷ்-விக்னேஷ் (காக்கா முட்டை)
சிறந்த எடிட்டர் - விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா) 


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions