தேசிய விருது படத்தை பாராட்டிய தேசிய விருது இயக்குனர்

Bookmark and Share

தேசிய விருது படத்தை பாராட்டிய தேசிய விருது இயக்குனர்

மேல்தட்டு மக்கள் மட்டுமே சாப்பிட முடியும் என்று நினைக்கிற பீட்சாவை குடிசைப் பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்கள் சாப்பிட நினைக்கிறார்கள். இந்த கருவை மையமாக வைத்து உருவாகி, சமீபத்தில் வெளிவந்த ‘காக்கா முட்டை’ படம் தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. மேலும், இப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு மழைகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

தேசிய விருது பெற்ற இப்படத்தை தேசிய விருது பெற்ற ஒரு இயக்குனர் தனது பாராட்டை தெரிவித்து இருக்கிறார். ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர் பறவை’ ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி, ‘காக்கா முட்டை’ படத்தை பார்த்து விட்டு, படம் ஒரு சிறு கவிதை போன்று இருந்ததாகவும், அர்த்தமுள்ள ஒரு படமாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ‘காக்கா முட்டை’ படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

சீனுராமசாமி ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றவர். இவருடைய இயக்கத்தில் தற்போது ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்துள்ளனர்.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
அஜித்தைப் பார்க்கத் துடிக்கும் பெரிய காக்கா முட்டை!
தமிழ் படங்களை சப்-டைட்டிலுடன் பார்க்கும் தோனி
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ்
\'காக்கா முட்டை\' படத்திற்கு கரன் ஜோஹர் பாராட்டு
வரிசையாக சென்னைப் படங்கள்!
\'காக்கா முட்டை\'க்கு மேலும் ஒரு விருது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions