'காக்கா முட்டை' படத்திற்கு கரன் ஜோஹர் பாராட்டு

Bookmark and Share

'காக்கா முட்டை' படத்திற்கு கரன் ஜோஹர் பாராட்டு

"காக்கா முட்டை" படம் பார்த்தவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட படம் பார்த்த  அனைவரும் பாராட்டி வரும் நிலையில், மேலும் முத்தாய்ப்பாக, பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான கரன் ஜோஹரும், படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். படத்தை எழுதி இயக்கியுள்ள எம். மணிகண்டனுக்கு, தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கரன் ஜோஹர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது,

"இந்திய திரையுலகின் மிகச்சிறந்த படம், படம் சிறப்பாக உள்ளது. சிறிய படமாக இருந்தாலும், எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த குழந்தைகள் நட்சத்திரத்திற்கான படம் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் பிரிவுகளில் தேசிய விருதுகள் வென்றுள்ள காக்கா முட்டை படம், டொரன்டோ சர்வதேச திரைப்பட விழா உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தி்ல் உருவாகியுள்ள பாகுபலி- தி பிகினிங் படத்தை, ஹிந்தியில், கரன் ஜோஹர் வெளியிட உள்ளார்.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
டுவிட்டரில் தன்னை கலாய்த்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்
பாகுபலி படத்தின் மூலம் கரன் ஜோகர் எவ்வளவு சம்பாதித்தார் தெரியுமா?
பாகுபலி தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விட்ட மர்ம கும்பல்! பின்னணியில் யார்
பாகுபலி 2 உண்மையான வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ தகவல்
இன்று வெளியாகவிருந்த `பாகுபலி 2' படத்தின் ப்ரீமியர் காட்சிகள் ரத்து
பாகுபலி 2 படம் வெளியாவதற்கு முன் ரசிகர்கள் படம் பார்க்கலாம்- கரண் ஜோஹரின் அதிரடி முடிவு
படப்பிடிப்பு தளம் சூறை: இயக்குனர் ராஜ மவுலி, கரண் ஜோகர் கண்டனம்
ஊர் சுற்றாதே, மீடியா கண்ணில் படாதே: மயிலு மகளுக்கு இயக்குனர் உத்தரவு
ஏ.ஆர். ரகுமானை கலாய்த்த பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions