காக்கா முட்டை, குற்றம் கடிதல் படங்களுக்கு தேசிய விருது வாய்ப்பு.?!

Bookmark and Share

காக்கா முட்டை, குற்றம் கடிதல் படங்களுக்கு தேசிய விருது வாய்ப்பு.?!

2015ம் ஆண்டுக்கான தேசிய விருதில், காக்கா முட்டை மற்றும் குற்றம் கடிதல் படங்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது. தனுஷின் பட நிறுவனமும், இயக்குனர் வெற்றி மாறனின் பட நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் காக்கா முட்டை.

மணிகண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் ரமேஷ், ரமேஷ் திலகநாதன், விக்னேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

ஸ்லம் ஏரியாவில் குழந்தைகள் சிலரின் பீட்ஸா ஆசை தான் காக்கா முட்டை படம். இப்படம் முடிந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னும் ரிலீஸாகவில்லை. அதேசமயம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது பெற்றுள்ளது.

இதேப்போல் பெற்றோருக்கும், மற்றொருக்கும் நடக்கிற விஷயங்களை சமூக சார்ந்து சொல்கிற படம் தான் குற்றம் கடிதல். ஜி.பிரம்மா என்பவர் இயக்கி இருக்கிறார். இப்படமும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வாங்கியுள்ளது.

இந்நிலையில், 2015ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில், 'காக்கா முட்டை' யும், 'குற்றம் கடிதல்' படமும் தேர்வாகியுள்ளது. குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த இரண்டு படங்களுக்கும் இந்தாண்டு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மார்ச் 24ம் தேதி தேசிய விருது அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
மீண்டும் ஆசிரியையாக நடிக்கும் குற்றம் கடிதல் ராதிகா!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பல விருதுகளை பெற்ற குற்றம் கடிதல் ஆஸ்கர் விருதுக்கு செல்கிறது!
அஜித்தைப் பார்க்கத் துடிக்கும் பெரிய காக்கா முட்டை!
தமிழ் படங்களை சப்-டைட்டிலுடன் பார்க்கும் தோனி
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் தனுஷ்
\'காக்கா முட்டை\' படத்திற்கு கரன் ஜோஹர் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions