காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!

Bookmark and Share

காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!

சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படம் வெளியாகி நாளையோடு 50 ஆவது நாள்! தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட், பி.மதன் தமிழகம் முழுக்க வெளியிட்டார்.

பிப்ரவரி 27 அன்று வெளியான காக்கி சட்டை படம் இன்னமும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகவும் மற்ற நாட்களில் 60 சதவிகித ஆடியன்ஸ் உடன் காக்கி சட்டை படம் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

பிரபுசாலமன் இயக்கத்தில் கயல் படத்தைத் தயாரித்த வகையில் மதனுக்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை ஈடுகட்டி மேலும் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது காக்கி சட்டை.

சுருக்கமாக சொல்வது என்றால்...50 நாட்களில் ஏறக்குறைய 50 கோடியை வசூல் செய்திருக்கிறது. இப்படத்தின் வசூலை கணக்கில் கொண்டே ரஜினி முருகன் படத்தை சுமார் 65 கோடிக்கு பிசினஸ் செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
பாம்பு சட்டையை பெரிதும் நம்பும் பாபி சிம்ஹா!
பாம்பு சட்டை படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்டப் பணிகள் துவக்கம்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
பாம்புசட்டை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை!
பாம்பு சட்டை படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்த படக்குழு
பாம்பு சட்டை படப்பிடிப்பு 5 நாள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது!
பாபி சிம்ஹாவுக்காக காத்திருக்கும் பாம்புசட்டை யூனிட்!
சாட்டை அன்பழகன் படத்தில் கயல் சந்திரன்!
காக்கி சட்டை படத்தின் வெற்றி குறித்து லாஜிக்கான சந்தேகம்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions