காக்கி சட்டை 50 கோடி வசூல் ?

Bookmark and Share

காக்கி சட்டை 50 கோடி வசூல் ?

சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் பிப்ரவரி 27ம் தேதி வெளிவந்த 'காக்கி சட்டை' திரைப்படம் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பரீட்சை ஆரம்பிக்கப்பட்ட நேரத்திலும், கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்திலும் இப்படம் வெளியானதால் பெரிய வரவேற்பு இல்லை என்று சொல்லப்பட்டது.

ஆனால், வசூலில் இந்தப் படம் எந்தக் குறையையும் வைக்கவில்லை என்கிறார்கள். முதல் சில நாட்களிலேயே சுமார் 20 கோடி ரூபாய் வசூலித்த இந்தத் திரைப்படம் மூன்றாவது வாரத்தைத் தொட்டுள்ள நிலையில் சுமார் 50 கோடி வரை வசூலைக் குவித்திருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளாவில் சுமார் 1 கோடி ரூபாயையும், கர்நாடகாவில் 2 கோடி ரூபாயையும் இந்தப் படம் வசூலித்திருக்கிறதாம். மார்ச் மாதம் 6ம் தேதியிலும், 13ம் தேதியிலும் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தாலும் 'காக்கி சட்டை' படத்திற்கு அந்தப் படங்களால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையாம்.

பல திரையரங்குகளில் வார இறுதிகளில் நல்ல வசூலைப் பெற்றிருக்கிறது என்கிறார்கள். அனிருத் இந்தப் படத்தில் பாடல்களில் நிறையவே ஏமாற்றிவிட்டார் என்ற விமர்சனம் படத்தை கொஞ்சம் பாதித்திருக்கிறது.

'எதிர் நீச்சல், மான் கராத்தே' படங்கள் அளவிற்கு இந்தப் படத்தில் பாடல்கள் இல்லை என்பது இசை ரசிகர்களின் கருத்தாக உள்ளது. 'காக்கி சட்டை' படத்தின் வசூல் சிவகார்த்திகேயன் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'ரஜினி முருகன்' படத்திற்கு நிறையவே உதவும் என்கிறது வியாபார வட்டாரம்.


Post your comment





Related News
காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!
காக்கி சட்டை படத்தின் வெற்றி குறித்து லாஜிக்கான சந்தேகம்...
காசு கொட்டும் காக்கி சட்டை
வெளிநாடுகளில் எனக்குள் ஒருவன், காக்கி சட்டை வசூல் நிலவரம்
எனக்குள் ஒருவனால் எட்டிப்பிடிக்க முடியாத காக்கி சட்டை!
வெளிநாடுகளில் கலக்கும் காக்கி சட்டை
\'காக்கி சட்டை\' ரிலீஸ் தேதி சரியா...?
காக்கி சட்டையை அட்டாக் செய்த உலக கோப்பை கிரிக்கெட்!
காக்கி சட்டை.. வந்தாச்சு ஆன்லைன்ல திருட்டு வீடியோ
முதல் நாள் வசூலில் சாதனை படைக்குமா காக்கி சட்டை?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions