காக்கி சட்டை படத்தின் வெற்றி குறித்து லாஜிக்கான சந்தேகம்...

Bookmark and Share

காக்கி சட்டை படத்தின் வெற்றி குறித்து லாஜிக்கான சந்தேகம்...

பிப்ரவரி 27ஆம் தேதி ரிலீஸான 'காக்கி சட்டை' படம் 25வது நாளைக் கடந்து இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றிஜோடியான சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா மீண்டும் நடித்திருந்த இப்படத்தை தனுஷ் தயாரித்தார்.

எதிர்நீச்சல், மான்கராத்தே படங்களைத் தொடர்ந்து 'காக்கி சட்டை' படத்தில் சிவகார்த்திகேயன் - இசையமைப்பாளர் அனிருத் 3வது முறையாக கூட்டணி அமைத்தார்கள் . முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக அதிகமான திரையரங்குகளில் காக்கி சட்டை படத்தை வெளியிட்டார் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்.

அதோடு, பப்ளிசிட்டிக்கும் பல கோடிகளை ஒதுக்கினார். அதன் காரணமாக காக்கி சட்டை படம் வெளியான முதல் 3 நாட்களிலேயே 25 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. தற்போது 25 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் 'காக்கி சட்டை' படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் செம லாபம் கிடைத்துள்ளது உறுதிபட்டிருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் அனிருத்தும் காக்கி சட்டை படத்தை வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும்  ட்விட்டரில் நன்றி சொல்லியிருக்கிறார்கள் . குறிப்பாக 'காக்கி சட்டை' படம் சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் செய்திருப்பதாகவும் அவர்கள் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதோடு எதிர்நீச்சல், மான்கராத்தே, காக்கி சட்டை என தங்கள் கூட்டணி தந்துள்ள 'ஹாட்ரிக் ஹிட்' எனவும் சிவகார்த்திகேயனும், அனிருத்தும் கூறியிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, காக்கி சட்டை படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியும் சக்சஸ்மீட் வைக்கப்படவில்லை.

அதை வைத்து காக்கி சட்டை படம்  வெற்றிப்படமில்லை. உண்மையிலேயே வெற்றியடைந்திருந்தால் சக்சஸ்மீட் வைத்திருப்பார்களே என்று லாஜிக்காக சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!
வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா?
வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு
2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?
விஜய் டீவியை மேடையிலேயே கலாய்த்த டிடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions