காலா டீசரின் புதிய சாதனை

Bookmark and Share

காலா டீசரின் புதிய சாதனை

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த டீசரை 2 கோடியே 41 லட்சத்திற்கும் மேலாக ரசிகர்கள் இதுவரை பார்த்துள்ளனர்.

இந்நிலையில், இந்த டீசரை லைக் செய்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இப்படம் ஏப்ரல் 27ம் தேதி ‘காலா’ ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பட அதிபர்கள் போராட்டத்தால் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது. 

தற்போது ‘காலா’ வருகிற ஜூன் 7-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
அடுத்த படத்திலும் காலா கனெக்‌ஷனை பின் பற்றும் ரஜினி
ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை - பா.ரஞ்சித்
கர்நாடகாவில் காலா படம் வெளியாக எதிர்ப்பு: திரையரங்குகள் முன் கன்னட அமைப்பினர் போராட்டம்
காலா படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பதா? - ரஜினிக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் வாய்ஸ்
வெளிநாடுகளிலும் காலா படத்திற்கு தடை - தொடரும் சிக்கலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காலா
காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவது குறித்து முடிவு இன்று வெளியிடப்படும் - விஷால்
காலாவை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் - வாட்டாள் நாகராஜ் மிரட்டல்
காலா ரிலீசாகும் நாளே இணையதளத்தில் வெளியாகும் - தமிழ் ராக்கர்ஸ் அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions