காலா படத்தின் டப்பிங் இன்று முதல் தொடக்கம்.!

Bookmark and Share

காலா படத்தின் டப்பிங் இன்று முதல் தொடக்கம்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கும் படம் காலா. வுண்டர்பேர் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இந்த படம், கபாலி திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாரும் - பா.ரஞ்சித்தும் இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் சூட்டிங் முற்று பெற்ற நிலையில், போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டப்பிங் இன்று சென்னையில் உள்ள KNACK ஸ்டூடியோவில் தொடங்கியது. 

இன்று நடைபெற்ற பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் கலந்து கொண்டார். காலா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா ஆகியோர் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது

 


Post your comment





Related News
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
காலா படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பதா? - ரஜினிக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் வாய்ஸ்
காலா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
காலா படம் எப்படி இருக்கும்? - சென்சார் போர்டின் விமர்சனம்.!
ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, காலாவுக்கு சென்சாரில் இத்தனை கட்டா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
காலா படத்தின் கிளைமேக்ஸ் இது தான், புகைப்படத்துடன் இதோ
அடேங்கப்பா காலா பட நாய்க்கு இப்படியொரு மவுசா, கோடிகளுடன் கடும் போட்டி - என்னாச்சு தெரியுமா?
காலா படத்தின் டப்பிங்கை முடித்த நானா படேகர்.!
ரஜினிக்கு எதிராக களமிறங்கும் 2 முன்னணி ஹீரோக்கள்
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions