காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தினால் 48 நாட்களுக்கு மேல் புதிய படங்கள் திரைக்கு வராமல் இருந்தன. கடந்த மாதம் 30-க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி இருந்தன. இந்த மாத வெளியீட்டுக்கும் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் தயாராக உள்ளன. 

வழக்கமாக தமிழ் புத்தாண்டில் பெரிய பட்ஜெட் படங்கள் அதிகமாக திரைக்கு வரும். ஆனால் இந்த ஆண்டு படஅதிபர்கள் போராட்டத்தால் எந்த ஒரு படமும் ரீலீசாகவில்லை. 
இந்நிலையில், வேலை நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் வாரத்துக்கு 3 முதல் 4 படங்களை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மேலும் படங்கள் வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் தணிக்கை முடிந்த படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட திட்டமிட்டு உள்ளது.

தியேட்டர்களில் புதிய படங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ரிலீஸ் ஆகும். முதலாவதாக ‘மெர்குரி’ படமும், மேலும் 2 சிறிய பட்ஜெட் படங்களும் திரைக்கு வரும். 
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா, கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 படங்களும் திரைக்கு வர தயாராக இருக்கின்றன.

இந்த படங்கள் தணிக்கை முடிந்து ‘யுஏ’ சான்றிதழை பெற்றுள்ளன. காலா படத்துக்கு முன்பே விஸ்வரூபம்-2 தணிக்கை முடிந்துவிட்டது. காலா படத்தை இந்த மாதம் இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்துக்கு முன்பாக தணிக்கை முடிந்த 40-க்கும் மேற்பட்ட படங்கள் காத்திருக்கும் நிலையில், காலா படத்தை வெளியிட அனுமதி கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தியேட்டர்கள் கிடைக்காவிட்டால் காலா, விஸ்வரூபம்-2 ஆகிய 2 படங்களுமே அடுத்த மாதம் திரைக்கு வரும் என்றும், ரிலீஸ் தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஷால் தெரிவித்துள்ளார். 


Post your comment





Related News
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!
மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித்! இது தான் கெத்தான சாதனை
தமிழ் படம் 2 படத்தின் பின்னணியில் இருப்பது இதுதான்! இயக்குனர் சொல்லும் உண்மை
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions