தமிழில் தொடர்ந்து நடிக்க காளீஸ்வரி விருப்பம்

Bookmark and Share

தமிழில் தொடர்ந்து நடிக்க காளீஸ்வரி விருப்பம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற ஒரு தமிழ் படம் பற்றி இங்கு அதிகம் யாரும் பேசவில்லை. அது தீபன் என்ற படம். இலங்கை அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து மடிந்த திலீபனின் கதை வழியாக இலங்கை தமிழர்களின் இன்னலைச் சொல்லும் படம்.

இதில் எழுத்தாளர் ஷோபா சக்தி தீபனாக நடித்துள்ளார். அவரது காதல் தோழியாக நடித்திருப்பவர் காளீஸ்வரி. காளீஸ்வரி சென்னையைச் சேர்ந்தவர். முறையாக நடிப்பு பயிற்சி பெற்று மேடை நாடகங்களில் நடித்தவர். இவர் நடித்த நாடகம்தான் இவருக்கு தீபன் வாய்ப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

பல மாதங்கள் கடுமையான, முறையான பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார். கேன்ஸ் விழாவில் விருது பெற்றுத் திரும்பியிருகிறார். "நாடகம்தான் என் உலகம். அந்த உலகத்திலிருந்து இப்போது சினிமாவுக்கு வந்திருக்கிறேன். நடிப்பு என் தொழில் இல்லை.

அது என் சுவாசம். 4 வருடங்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய தீபன் ஸ்கிரிப்டுக்காக என் உழைப்பு முழுவதையும் கொடுத்திருக்கிறேன். இந்த ஒரு படத்தில் நடித்ததே நான் கற்ற நடிப்பின் பூரணத்துவத்தை அடைந்து விட்டேன். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் காளீஸ்வரி


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions