சிம்புவின், கான் பர்ஸ்ட் லுக் வெளியானது

Bookmark and Share

சிம்புவின், கான் பர்ஸ்ட் லுக் வெளியானது

சிம்பு நடித்து வரும் கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வௌியாகியுள்ளது. இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கி வரும் படம்  கான்.

முதன்முறையாக சிம்பு - செல்வராகவன் இணைந்துள்ள இப்படத்தில், மெட்ராஸ் பட நாயகி கேத்ரீன் தெரஸா மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக வளர்ந்து வருகிறது.

கான் படத்தில் சிம்பு, முருக பக்தராக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வௌியான நிலையில், இப்போது அதை மெய்பிக்கும் வகையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.

ஆமாம் கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாலை 5 மணியளவில் வௌியிடப்பட்டது. அதில் சிம்பு பச்சை சட்டை அணிந்தபடி, நெற்றியில் விபூதி, பொட்டு எல்லாம் இட்டு, கையெடுத்து வணங்கியபடி ஒரு முருக பக்தர் போன்று காட்சியளிக்கிறார். சிம்புவின் பின்புறத்தில் கோவில் கோபுரம் ஒன்று இருக்கிறது. அத்துடன் கான் என்ற பட தலைப்புக்கு கீழ் காடும் காடு சார்ந்த பகுதியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிம்பு - செல்வராகவன் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ள படம் இது என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் இப்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமாக, சிம்புவை ஒரு புதிய கோணத்தில் பிரதிபலிப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.

கான் படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 17ம் தேதி வௌியிடப்படும் என சிம்பு டுவிட்டரில் அறிவித்த அன்றே அவரது ரசிகர்கள், டுவிட்டரில் டிரெண்டிங்கை ஏற்படுத்தி அதகளப்படுத்தினர். இப்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே வௌியாகிவிட்டது. சிம்பு ரசிகர்கள் என்ன செய்ய காத்திருக்கிறார்களோ.?


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
காதலர் தினத்தில் காணாமல் போன காதலியை தேடும் கார்த்திகேயன்
கடவுள் இருக்கான் குமாரு காமெடியா? கடியா? மினி விமர்சனம்!
சிம்பு செய்த அட்டகாசம் – கான் படம் கைவிடப்பட்டதின் பின்னணி
சிம்புவின் கான் நின்றதன் பின்னணி? அதிர்ச்சி தகவல்
கான் படத்திற்கு பாடல் தயாராகாதது ஏன்?
கான் படத்தின் கதை இதுதான்.?
சிம்பு நடிக்கும் கான் - ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2வா?
ஆரண்ய காண்டம் டிவிடி வெளியிட என்னிடம் வசதி இல்லை: சரண் சொல்கிறார்
7ம் நம்பர் செண்டிமெண்டில் உருவாகும் - \'காணும் கனவுகள்\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions