கான் படத்திற்கு பாடல் தயாராகாதது ஏன்?

Bookmark and Share

கான் படத்திற்கு பாடல் தயாராகாதது ஏன்?

சிம்புவை வைத்து செல்வராகவன் இயக்கும் கான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுவதாக சொல்லப்பட்டது. இப்படத்துக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

லேட்டஸ்ட் தகவலின்படி... கான் படத்துக்கு இதுவரை ஒரு பாடல் கூட தயாராகவில்லையாம். அண்மையில் இஸ்லாம் மதத்துக்கு மாறிய யுவன்சங்கர்ராஜா, துபாயில் வசிக்கும் கீழக்கரையைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார்.

தற்போது 30 நாட்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்கும் காலம். எனவே நோன்பு வைப்பதற்காக துபாய் சென்றுவிட்டாராம் யுவன்சங்கர்ராஜா. வரும் 18 அன்று ரம்ஜான் பண்டிகை. துபாயிலேயே பண்டிகையைக் கொண்டாடிவிட்டுத்தான் சென்னை திரும்புகிறராம் யுவன்.

சென்னை வந்த சில நாட்களிலேயே கனடாவில் நடத்த உள்ள இசைநிகழ்ச்சிக்கான முன்தயாரிப்பு வேலைகளில் ஈடுபட இருக்கிறாராம். அதன் பிறகு கனடா செல்லும் யுவன் சங்கர்ராஜா இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்த பிறகே கான் படத்துக்கான கம்போஸிங்கில் உட்கார திட்டமிட்டிருக்கிறாராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions