சிம்பு நடிக்கும் கான் - ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2வா?

Bookmark and Share

சிம்பு நடிக்கும் கான் - ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2வா?

இரண்டாம் உலகம் என்ற படு தோல்விப் படத்திற்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் சிம்பு. பெயர் சூட்டாமல் படப்பிடிப்பு தொடங்கிய இப்படத்திற்கு தற்போது கான் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

க்ளோ ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியும், அவரது பள்ளிகால நண்பரான சித்தார்த்தும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். 

த்ரிஷா புகழ் வருண்மணியன் இந்தப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருக்கிறாராம்.செல்வராகவனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  கடந்த சில வாரங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுவந்தது.

தற்போது கான் என படத்துக்கு தலைப்பு வைத்து  பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். பின்னணியில் பழங்கால கோவில் கோபுரம் ஒன்று இருக்க அதன் கீழே மக்கள் கூட்டம் கும்பிடுவதுபோலும், வலபுறம் நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்சத்துடன் சிம்பு வணங்குவது போலவும் இப்போஸ்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் கான் படத்தில் சிம்பு முருகபக்தராக நடிக்கிறார். கான் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் டைட்டிலுக்குக் கீழே காடும் காடு சார்ந்த இடமும் (முல்லை) என்ற டேக் லைன் இடம்பெற்றிருக்கிறது. 

படத்தின் தலைப்பையும் டேக்லைனையும் பார்த்தால்... கான் படம்  ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2ஆம் பாகமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.
கார்த்தியை வைத்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன்  படம் மிகப்பெரிய தோல்விப்படம். அதன் கதையைத்தான் தற்போது சிம்புவுக்காக சற்று மாற்றி கான் என்ற பெயரில் செல்வராகவன் படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கான் படத்தில் பணியாற்றுபவர்களே கூறுகிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions