கான் படத்தின் கதை இதுதான்.?

Bookmark and Share

கான் படத்தின் கதை இதுதான்.?

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கான் படத்தின் படப்பிடிப்புகள் துவங்கி விட்டது. பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டு விட்டனர். கேத்ரின் தெரசா ஹீரோயினாக நடிக்கிறார். டாப்ஸி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். நா.முத்துகுமார் பாடல்களை எழுதுகிறார், யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

பொதுவாக செல்வராகவன் ஹீரோக்களை உருவாக்குவார். ஆனால் முதன் முறையாக சிம்பு என்ற ஹீரோவுக்காக படம் இயக்குகிறார். ஹீரோ ஓப்பனிங் சாங். பன்ஞ் டயலாக், இண்டர்வெல் டுவிஸ்ட், கிளைமாக்ஸ் பைட்டு என்று பக்கா கமர்ஷியல் பார்முலாவுக்குள் வந்திருக்கிறார் செல்வராகவன்.

பொதுவாக செல்வராகவன் பட கதை ரொம்பவே சீக்ரெட்டாக இருக்கும். இந்த கதை கொஞ்சம் கசிந்திருக்கிறது. கசிந்த வரை கதை இதுதான்... சிம்பு வீட்டுக்கு அடக்கமான பையன். முருக பக்தன். ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடித்து தினமும் கோவிலுக்கு சென்று வரும் 100 சதவிகித நல்ல பிள்ளை. அவரின் இன்னொரு முகம் அவர் இந்திய அரசின் முக்கியமான ரகசிய உளவாளி.

ஒரு சர்வதேச சதி ஒன்று சென்னையில் நடக்கிறது. சர்வதேச நாசகார கும்பல் இங்குள்ள தாதாக்களை பயன்படுத்தி அந்த சதியை அரங்கேற்ற நினைக்கிறது. அதை சிம்பு எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதை. கடைசி நேரத்தில் அவர் நிஜமுகம் தெரிந்துவிடும் என்கிற மாதிரி கதை கிடையாது. கடைசி வரை முருக பக்தர் என்பதை மெயிண்டைன் பண்ணிக் கொள்வார். 

முருக பக்தர், உளவாளி இருவரும் ஒருவரே என்பது படம் பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும். படத்தின் கேரக்டர்களுக்கு தெரியாது. கேத்ரின் தெரசா முருக பக்தரை காதலிக்கிறார், டாப்ஸி உளவாளியை காதலிக்கிறார். முருக பக்தர் கெட்அப் பர்ஸ்ட் லுக்கில் வெளியிடப்பட்டுள்ளது. உளவாளி கெட் அப் கடைசி வரை பாதுகாக்கப்படும். என்கிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions