`காற்று வெளியிடை', `8 தோட்டாக்கள்' உள்ளிட்ட 7 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

Bookmark and Share

`காற்று வெளியிடை', `8 தோட்டாக்கள்' உள்ளிட்ட 7 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

வருகிற ஏப்ரல் 7-ஆம் தேதி ஒரே நாளில் 7 படங்கள் ரிலீசாக உள்ளன. இதில் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி - அதிதி ராவ் ஹிடாரி நடிப்பில் உருவாகி உள்ள `காற்று வெளியிடை' படம் ரிலீசாகிறது. அதேநேரத்தில் புதுமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள `8 தோட்டாக்கள்' படமும் ரிலீசாகிறது. 

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி அறிமுக நாயகனாகவும், அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ள படம் ‘8 தோட்டாக்கள்’. கிரைம் திரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படம், காணாமல் போன ஒரு துப்பாக்கியில் இருந்து வெளியேறும் 8 தோட்டாக்களால் ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்டு நகர்கிறது. இப்படத்தில் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். 

இவ்வாறாக, வருகிற 7-ஆம் தேதி ஒரே நாளில் `ஐயனார் வீதி', `சாயா', `ஜுலியும் 4 பேரும்', `செஞ்சிட்டாலே', `விருத்தாச்சலம்' உள்ளிட்ட படங்களும் ரிலீசாக உள்ளன. 


Post your comment

Related News
சிறுபட்ஜெட் படத்தை பார்த்து புகழ்ந்து தள்ளிய ரஜினி- இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி
கார்த்திக்கு இப்படி ஒரு சோதனையா? நம்பியதால் ஏற்பட்ட விளைவு
8 தோட்டாக்கள் இயக்குனருடன் இணையும் அதர்வா
மணிரத்னம் காற்று வெளியிடை வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூல்
நமக்கு எதுக்கு வம்பு, சூப்பர்னு சொல்லிடுவோம் - வைரலாகும் காற்று வெளியிடை படத்தின் மீம்ஸ்!
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?
8 தோட்டாக்கள் இயக்குனருக்கு கிடைத்த வெகுமதி! என்ன தெரியுமா
8தோட்டாக்கள் இயக்குனரை கூப்பிட்டு சப்ரைஸ் கொடுத்த எம் எஸ் பாஸ்கர்
அமெரிக்காவில் காற்று வெளியிடை வசூல் மழை- முழு விவரம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions