காவல் படத்தின் தோல்வி கரணமாக, தள்ளிப்போன மாப்ள சிங்கம் ரிலீஸ்!

Bookmark and Share

காவல் படத்தின் தோல்வி கரணமாக, தள்ளிப்போன மாப்ள சிங்கம் ரிலீஸ்!

அஞ்சலி ஹீரோயினாக நடித்த மாப்ள சிங்கம், அப்பாடக்கர் ஆகிய இரண்டு படங்கள் இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீசாகவிருந்தன. தான் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்திருந்தார் அஞ்சலி. யார் கண் பட்டதோ தெரியவில்லை தற்போது மாப்ள சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்விட்டது.

அஞ்சலி கடைசியாக நடித்த தமிழ்ப் படம் - சேட்டை.  இந்த படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம்-2 படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கும் குத்தாட்டம் போட்டார்!  அதன் பிறகு அவரது சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆந்திராவில் செட்டிலானார்.

எனவே தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார் அஞ்சலி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்து மாப்ள சிங்கம் மற்றும் சகலகலா வல்லவன் - அப்பா டக்கர் படங்களில் நடித்தார்.  இதில் மாப்ள சிங்கம் படத்தில் விமலுக்கு ஜோடி.

சகலகலா வல்லவன் - அப்பா டக்கர் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்துள்ளார்.  இந்த இரண்டு படங்களும் இம்மாதம் 31-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது என்று சொல்லப்பட்டது.  

தற்போது கிடைத்த தகவலின்படி மாப்ள சிங்கம் படத்தை ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்துவிட்டனர். விமல் நடித்த காவல் படத்தின் படு தோல்வி காரணமாக, மாப்ள சிங்கம் படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions