காவியத்தலைவனுக்காக இந்தி வாய்ப்பை காவு கொடுத்த பிருத்விராஜ்..!

Bookmark and Share

காவியத்தலைவனுக்காக இந்தி வாய்ப்பை காவு கொடுத்த பிருத்விராஜ்..!

மலையாள இளம் முன்னணி ஹீரோவான பிருத்விராஜுக்கு ஒரு கட்டத்தில் இந்தி சினிமா சிவப்பு கம்பளம் விரிக்கத்தான் செய்தது.. அந்தவகையில் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் ராணிமுகர்ஜியுடன் 'அய்யா', யாஷ்ராஜ் ஃப்லிம்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்த 'ஔரங்கசீப்' என இரண்டு இந்திப்படங்களில் நடித்தார்.

ஆனால் இந்த இரண்டு படங்களும் சரியாக போகாததால், பாலிவுட் நமக்கு சரிப்பட்டு வராதோ என்கிற குழப்பத்தில் கொஞ்சநாள் இருந்தார். கொஞ்ச காலம் கழித்து மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு பிருத்விராஜை தேடிவந்தது.

ஆனால் அப்போதுதான் தமிழில் வசந்தபாலன் இயக்கிய 'காவியத்தலைவன்' படத்தில் நடிப்பதற்காக தேதிகளை மொத்தமாக அள்ளிக்கொடுத்திருந்தார். தவிர பாலிவுட்டில் நடிப்பதைவிட, 'காவியத்தலைவன்' தனக்கு மிகப்பெரிய வெற்றியை தரும் என மனக்கணக்கு போட்ட பிருத்விராஜ், அதன் அடிப்படையில் அந்த இந்திப்பட தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து ஆர்வம் காட்டவில்லை.  

பின்னர் அந்த வாய்ப்பு அபிஷேக் பச்சனுக்கு போய்விட்டது. இங்கே 'காவியத்தலைவன்' படத்தில் பிருத்விராஜின் நடிப்பு நன்றாக பேசப்பட்டாலும் படம் பப்படமாகிவிட நொந்துபோனார் பிருத்விராஜ்.

ஆனால் இவர் மறுத்த, இந்திப்படமோ சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. அது தான் ஷாருக்கான், அபிஷேக் பச்சன் இணைந்து நடித்து கடந்தவருடம் வசூலை வாரிக்குவித்த 'ஹேப்பி நியூ இயர்' படம். பிருத்விராஜுக்கு வேண்டப்பட்ட நண்பர் ஒருவர் மூலமாக சமீபத்தில் தான் பிருத்விராஜ் ஏமாந்த இந்த செய்தி தெரிய வந்துள்ளது. 


Post your comment





Related News
காவியத்தலைவன் படத்துக்கு 6 விருதுகள்
ஒரு காவிய சோகம்
காவியத்தலைவனுடன் ஸ்கூபா டைவிங் அடித்த அமரகாவிய நாயகி...!
6-வது நார்வே திரைப்பட விழா விருது: காவியத்தலைவனுக்கு 5 விருதுகள்
சென்சார் அதிகாரிகள் பாராட்டினால் படம் ஓடுமா?
வெளிநாடுகளில் காவியத்தலைவன் வசூல் நிலவரம்
தமிழர்களின் நாடகக் கலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய காவியத்தலைவன்
காவியத்தலைவன் அனைவரும் பார்த்து கொண்டாட வேண்டிய படம்: விஜய் பாராட்டு
காவியத் \'தலைவனுக்கு\' வாழ்த்து சொல்லும் சமந்தா...
இன்றைய படங்கள்... காவியத் தலைவன், மொசக்குட்டி, விஞ்ஞானி, வேல்முருகன் போர்வெல்ஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions