சென்சார் அதிகாரிகள் பாராட்டினால் படம் ஓடுமா?

Bookmark and Share

சென்சார் அதிகாரிகள் பாராட்டினால் படம் ஓடுமா?

காவியத்தலைவன் படம் ரிலீஸாவதற்கு முன்னர், படம் நிச்சயம் வெற்றியடையும் என அவரை நம்ப வைத்த விஷயங்கள் என்ன என்பதை ஒரு சினிமா இயக்குனராக நான் செய்த அபத்தங்கள் என்ற தலைப்பில் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பட்டியலிட்டிருக்கிறார் வசந்தபாலன். அது மட்டுமல்ல, காவியத்தலைவன் படம் தோல்வியடைந்ததினால் தான் நம்பிய விஷயங்களை அபத்தம் என்றும் தெரிவித்துள்ளார். அவரது அபத்த நம்பிக்கை இதோ.. 

1. ஒரு படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனாலே படம் ஓடிவிடும் என்று நம்பியது

2. திருப்பதிக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டால் படம் ஓடிவிடும் என்று நம்புவது

3. படத்தின் கதை புது கதைக்களமாக இருந்தாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது

4. நமக்கு சுக்ரதிசை ஓடுகிறது அதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது

5. ரகுமான் இசையமைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது

6. கஜ்முர் தர்காவுக்கு போய் வேண்டிக்கொண்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது

7. ராமசந்திர மிஷன் மாஸ்டர் அனுகிரகம் கிடைத்துவிட்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது

8. இசைவெளியீட்டு விழாவில் அனைவரும் படம் ஓடும் என்று கூறுகின்றனர் என்று நம்புவது

9. படம் பார்த்துவிட்டு ஜெயமோகன் u will win என்று குறுஞ்செய்தி அனுப்பினாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது

10. என் மழலை மாறா குழந்தை அப்பா உங்க படம் ஹிட் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது

11. உதவி இயக்குனர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு சார் அப்போகலிப்டோ எடுத்து விட்டீர்கள் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது

12. முதல் இரண்டு படங்கள் ஓடிவிட்டதாலே அடுத்த படம் ஓடிவிடும் என்று நம்புவது

13. கையில் மந்திரித்த பச்சை கயிறு கட்டிக்கொண்டாலே திருஷ்டி போய் படம் ஓடிவிடும் என்று நம்புவது

14. 'ன்' என்று முடியும் என்ற வார்த்தையில் தலைப்பு வைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது

15. படம் பரபரவென்று ஓடுகிறது இதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது

16. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் காட்சிகளை ரசிப்பதை வைத்து கொண்டே படம் ஓடிவிடும் என்று நம்புவது

17. சபரிமலைக்கு மாலை போட்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது

18. தோரணமலை முருகன் கோவிலில் படப்பிடிப்பு எடுத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது

19. ப்ரிவியு படம் பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது

20. சென்சார் அதிகாரிகள் பாராட்டியதற்காக படம் ஓடிவிடும் என்று நம்புவது

இப்படி நிறைய நம்பிக்கைகள் திரையுலகம் முழுக்க சுழன்று வருகின்றன, ஆனால் வெற்றி மட்டும் யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு மாய கனி.


Post your comment

Related News
காவியத்தலைவன் படத்துக்கு 6 விருதுகள்
ஒரு காவிய சோகம்
காவியத்தலைவனுடன் ஸ்கூபா டைவிங் அடித்த அமரகாவிய நாயகி...!
காவியத்தலைவனுக்காக இந்தி வாய்ப்பை காவு கொடுத்த பிருத்விராஜ்..!
6-வது நார்வே திரைப்பட விழா விருது: காவியத்தலைவனுக்கு 5 விருதுகள்
வெளிநாடுகளில் காவியத்தலைவன் வசூல் நிலவரம்
தமிழர்களின் நாடகக் கலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்திய காவியத்தலைவன்
காவியத்தலைவன் அனைவரும் பார்த்து கொண்டாட வேண்டிய படம்: விஜய் பாராட்டு
காவியத் \'தலைவனுக்கு\' வாழ்த்து சொல்லும் சமந்தா...
இன்றைய படங்கள்... காவியத் தலைவன், மொசக்குட்டி, விஞ்ஞானி, வேல்முருகன் போர்வெல்ஸ்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions