கபாலி படத்திற்கு புதிய டைட்டில்?

Bookmark and Share

கபாலி படத்திற்கு புதிய டைட்டில்?

அட்டகத்தி ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் கபாலி. ரஜினியுடன் ராதிகா அப்தே, தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ், கலை அரசன் என மிகப்பெறிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆரம்பத்தில் இப்படத்தின் தலைப்பை அறிவித்தவுடன் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன.

இப்படத்தின் தலைப்பு வேறு ஒரு புதிய படத்தின் தலைப்பாக இருந்ததை தெரியாமல் ரஜினி படத்துக்கு இந்த டைட்டிலை அறிவித்துவிட்டார்கள். அதன்பின் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் பேசி தலைப்பை வாங்கினார்கள் படக்குழுவினர். தற்போது கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது இப்படத்தை விற்கும் வேலையில்(டிஸ்டிபூட்) வேலைகள் ஆரம்பித்துவிட்டன. தெலுங்கில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆகையால் தெலுங்கில் இப்படத்தின் தலைப்பை மஹாதேவ் என்று வைக்க திட்டமிட்டுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions