ரஜினியின் கபாலி டீசர் செய்த சாதனை

Bookmark and Share

ரஜினியின் கபாலி டீசர் செய்த சாதனை

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கபாலி’. ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் இன்று 11 மணியளவில் வெளியானது. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே பார்ப்பவர்களின் எண்ணிக்கையும், லைக்குகளும் அதிகரித்துக் கொண்டே சென்றது. யூடியூப்பில் இந்த எண்ணிக்கையை காட்ட முடியாதளவிற்கு ரசிகர்கள் பார்த்திருக்கின்றனர்.

இதற்காக யூடியூப் நிறுவனம், தயாரிப்பாளர் தாணுவிடம் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்ததால், பார்வையாளர் எண்ணிக்கையை சரிவர கணக்கெடுக்க முடியவில்லை, விரைவில் இதுகுறித்து அப்டேட் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

பின்னர் ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பேர் பார்வையிட்டதாக கலைப்புலி தாணு அறிவித்திருக்கிறார். ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் பேர் ஒரு படத்தின் டீசரைப் பார்த்தது இணையத்தளத்தில் இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

இதுவரை இந்தியாவில் எந்தப் படத்தின் டீசரையும் இவ்வளவு வேகமாக பத்து லட்சம் பேர் பார்த்ததில்லை. அதேபோல டீசர் வெளியான இரண்டு மணி நேரத்தில் 1.20 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. இதுவும் புதிய சாதனை என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

இது ஒருபக்கம் இருக்க, ‘கபாலி’ டீசரை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் புகழ்ந்து தள்ளியுள்ளனர். ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டர் தளத்தில், “அந்த கண்கள்.. அந்த சிரிப்பு.. அந்த வாய்ஸ் மற்றும் அந்த நடை… அய்யோ தலைவா..!!நன்றி பீம்ஜி (ரஞ்சித்) மற்றும் டீம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன், “தலைவர் வெறித்தனம்… ரஞ்சித் பிரதர் மகிழ்ச்சியின் உச்சம்” என்று கூறியுள்ளார். பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, “இதான் ஸ்டைல் இதான் ரஜினி இதான் தலைவா….” என்று தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ், “நெருப்புடா.. நெருங்குடா… தலைவா… நன்றி ரஞ்சித் அன்ட் டீம்” என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions