பிரம்மாண்ட அரங்குகளில் தொடங்கவுள்ள கபாலி திரைப்படம்!

Bookmark and Share

பிரம்மாண்ட அரங்குகளில் தொடங்கவுள்ள கபாலி திரைப்படம்!

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகளில் தொடங்கவுள்ளது.

எனவே கபாலி படத்திற்காக இரண்டு பிரம்மாண்டமான அரங்குகள் சென்னையின் இரு வேறு இடங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றனர். முன்பெல்லாம் படப்பிடிப்பு என்றாலே சென்னையின் மையப் பகுதியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ, பிரசாத் ஸ்டுடியோ ஆகிய இடங்களில் தான் அரங்குகளை அமைப்பார்கள். 

ஆனால், இப்போது அங்கு ஸ்டுடியோக்களில் உள்ள அரங்குகள் மிகவும் குறைந்துவிட்டது. இருக்கும் சில அரங்குகளை டிவி நிகழ்ச்சிகளை நடத்த எடுத்துக் கொண்டார்கள். 

சென்னையில் உள்ள திரைப்பட நகரமும் ஏறக்குறைய காணாமல் போய்விட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், இப்போது பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவிலும், பனையூரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவிலும் டைபெறுகின்றன. 

ஈவிபி ஸ்டுடியோவில் மாஸ், தூங்காவனம் போன்ற படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆதித்யராம் ஸ்டுடியோவில் புலி படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இப்போது அந்த இரண்டு ஸ்டுடியோக்களில் கபாலி படமும் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions