எந்திரன் – 2 : ரஜினியின் டூப்புக்கு மேக்கப் டெஸ்ட்

Bookmark and Share

எந்திரன் – 2 : ரஜினியின் டூப்புக்கு மேக்கப் டெஸ்ட்

யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்று கிராமத்துப்பக்கம் சொல்வார்கள். அதைப்போல், தோல்விப்படத்தில் நடித்தாலும் ரஜினி ரஜினி தான். அவரது மார்க்கெட், மவுசு, அவருடைய படத்தின் பிசினஸ் எதையும் மற்ற ஹீரோக்களால் எட்டவே முடியாது.

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படம் தோல்வியடைந்தாலும் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் கபாலி படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சம் தொட்டுள்ளது.

கபாலி படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது மலேசியாவில் முகாமிட்டிருக்கிறார் ரஜினி. அங்கு படப்பிடிப்பை முடித்த பிறகு தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதை முடித்த பிறகே சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார் ரஜினி.

இது ஒரு புறமிருக்க, ரஜினி அடுத்து நடிக்க உள்ள எந்திரன் 2 படத்திற்கான மேக்-அப் டெஸ்ட் நடத்திக் கொண்டிருக்கிறார் ஷங்கர். இதற்காக ஹாலிவுட்டிலிருந்து மேக்-அப் மேன் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

ரஜினி கபாலி படப்பிடிப்பில் இருக்க, இங்கே யாருக்கு மேக்கப் டெஸ்ட் நடத்துகிறார் ஷங்கர்? ரஜினியைப் போலவே தோற்றம் கொண்ட 50 வயது மதிக்கத்தக்க சில நபர்களை வரவைத்து அவர்களுக்குத்தான் மேக்-அப் டெஸ்ட் நடத்தி வருகிறார் ஷங்கர். இந்த மேக்கப் டெஸ்ட்டில் தேர்வாகும் நபர்தான் எந்திரன் -2 படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட பல காட்சிகளுக்கு ரஜினியின் டூப்பாக நடிக்க இருக்கிறார்.

கபாலி படப்பிடிப்பு முடிந்ததும் எந்திரன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ரஜினி. இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions