எழுத்தாளராக உருவெடுக்கும் கபாலி நடிகர் - விபரம் உள்ளே

Bookmark and Share

எழுத்தாளராக உருவெடுக்கும் கபாலி நடிகர் - விபரம் உள்ளே

வையம் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துவரும் புதிய படம் ‘உரு’. இப்படத்தில் மெட்ராஸ் , கவலை படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிங்கர் கலையரசன் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த அதே கண்கள் படம் வர்த்தக ரீதியாகவும் சரி ,விமர்சன பக்கத்திலும் நல்ல பெயர் பெற்றது.

இந்நிலையில் உரு’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். “உரு என்றால் ‘பயம்’ என்று பொருள் உண்டு. பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை என்பதால் இப்படத்திற்கு ‘உரு’ என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.

கதைப்படி நாயகன் கலையரசன் நல்ல குடும்பக் கதைகளை எழுதி வரும் எழுத்தாளர். ஆனால் இன்றைய மாறிவிட்ட சமூகச் சூழலில் இவரின் கதைகள் வரவேற்கப்படாமல் போகவே, தனது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை மிகவும் கவரும் திரில்லர் கதைகளை எழுத முடிவெடுத்து, மேகமலை என்ற ஊருக்கு செல்கிறார்.

அங்கு அவர் கதை எழுதத் தொடங்கும்போது அவரைச் சுற்றி சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் பரபரப்பான் திகில் கதை. பேய்ப் படம்தான் என்றாலும் பேய் இல்லாத திகில் படம் இது என்று இப்படத்தின் இயக்குனர் விக்கி கூறியுள்ளார்

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions