தயாரிப்பாளராகும் கபாலி இயக்குனர் பா. ரஞ்சித்

Bookmark and Share

தயாரிப்பாளராகும் கபாலி இயக்குனர் பா. ரஞ்சித்

தமிழ் சினிமாவில் அட்டகத்தி மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் பா ரஞ்சித். இவர் ஆரம்பத்தில் வெங்கட் பிரபுவிடம் துணை இயக்குனராக பணியாற்றிவர், அதன் பிறகு இவர் எடுத்த மெட்ராஸ் திரைப்படம் பலத்த வரவேற்பு பெற்றது. இந்த மெட்ராஸ் திரைப்படம் தான் ரஜினி திரைப்படத்தை எடுக்கும் அளவுக்கு உதவியது என்று அவரே கூறியுள்ளார்.

கபாலிக்கு பின் இயக்குனர் பா ரஞ்சித் இந்திய சினிமா அளவில் பரபரப்பாக பேசப்பட்டார். இதனால் ரஜினியின் அடுத்தபடத்தையும் இவரே டைரக்ட் செய்கிறார். இவர் தற்போது தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார். ‘நீலம்’ புரொடக்சன் என்று பெயரிட்ட இப்படநிறுவனம் மூலம் ‘பரியேறும் பெருமாள்’ (PARIYERUM PERUMAL) என்ற படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் மாரி செல்வராஜ் (MARI SELVARAJ ). இவர் இயக்குநர் ராமிடம் ‘கற்றதுதமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிதுள்ளார்.

திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. லவ், ஆக்ஷன், என எல்லா தரப்பு ரசிகர்களை கவரும் விதமாகவும் கதை அமைந்துள்ளது. கிருமி படத்தில் ஹீரோவாக நடித்த கதிர் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக அனந்தி நடிக்கவுள்ளார். மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.


Post your comment

Related News
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
காலாவை கட்டுப்படுத்துங்க - ரஞ்சித்திடம் சொன்ன ஷங்கர்?
சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
ரஜினியின் ‘காலா’ படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் முழுவிவரம் வெளியாகியது
இன்று மாலையே காலா கரிகாலனின் ஃபர்ஸ்ட் லுக்! - பா ரஞ்சித்
காலா... இந்தத் தலைப்புக்கு இத்தனை அர்த்தம் இருக்கா?
'கரிகாலன்' பெயர் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வைத்துள்ளோம்! - பா ரஞ்சித்
நாளை ரஜினி - பா. ரஞ்சித் படத்தின் முக்கிய அறிவிப்பு
ரஜினி பற்றி எல்லாம் தெரிந்தும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு ரஞ்சித் அடம்
ரஜினி - ரஞ்சித் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions