கபாலி படம் வெளிவந்தது 4 முறை பார்க்க துடிக்கும் பிரபல இயக்குனர்!

Bookmark and Share

கபாலி படம் வெளிவந்தது 4 முறை பார்க்க துடிக்கும் பிரபல இயக்குனர்!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் டீசர் நேற்று வெளியானது. பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து வரும் இந்த டீசருக்கு பல்வேரு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. 

தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த டீசருக்கு பலத்த வரவேற்பு கொடுத்து வரும் இந்த வேளையில், பாலிவுட், டோலிவுட், கோலிவுட்டில் பரபரப்புக்கு பெயர் போன இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘கபாலி’ படத்தின் டீசரை பார்த்து வியந்து போயுள்ளார்.

கபாலி டீசரை பார்த்துவிட்டு அவர் கூறும்போது, ரஜினி ஒருவரால் மட்டுமே இதுபோன்று திரையை அதிர வைக்க முடியும். நான் இந்த படத்தை முதல் நாளிலேயே 4 முறை பார்க்கப் போகிறேன் என்றார். மேலும் அவர் கூறும்போது, பல்வேறு வசூல் சாதனைகளை படைத்த ‘பாகுபலி’ படத்தைவிட ‘கபாலி’ சிறப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘கபாலி’ படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 


Post your comment





Related News
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
கொள்கைக்கு ஒத்து வராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை - ரஜினிகாந்த்
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
கதை கசிந்து விட்டதாக பரபரப்பு : ரஜினியின் ‘பேட்ட’ படம், பாட்ஷா 2–ம் பாகமா?
முறுக்கு மீசையுடன் ரஜினி - புதிய தோற்றத்திற்கு கிடைத்த வரவேற்பும், விமர்சனங்களும்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions