ரஜினியின் கபாலி சென்சார் பற்றிய புதிய அப்டேட்!

Bookmark and Share

ரஜினியின் கபாலி சென்சார் பற்றிய புதிய அப்டேட்!

ரஜினி நடிப்பில் ‘கபாலி’ படம் முடிவடைந்து, ஆடியோ, டீசர் எல்லாம் வெளியாகிவிட்டது. இந்நிலையில், படத்தின் ரீலீஸ் தேதியைக்கூட கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார்கள். ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 

இந்நிலையில்,  இந்த படம் இன்னும் தணிக்கை துறையினரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படவில்லை. தணிக்கை செய்யப்பட்ட பிறகுதான் படத்தின் ரீலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழுவினரும் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தை தணிக்கை பிரிவுக்கு நாளை (ஜுலை-8) அனுப்பவுள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. நாளை தணிக்கை பிரிவினர் படத்தை பார்த்துவிட்டு, படத்திற்கு எந்த சான்றிதழ் வழங்கலாம் என முடிவு செய்வார்கள் என கூறப்படுகிறது. 

அதன்பிறகு, ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர். ‘கபாலி’ மலேசியாவில் ஜுலை 29-ந் தேதி வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள பிரம்மாண்ட அரங்கமாக கூறப்படும் ரெக்ஸ் சினிமாஸில் ‘கபாலி’ படத்தின் சிறப்பு காட்சி ஜுலை 22-ந் தேதி திரையிடப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ‘கபாலி’ எப்போது வெளியாகும் என்ற மர்மம் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions