கபாலி ரிலீஸ் குறித்து மனம் திறந்த கலைப்புலி எஸ்.தாணு!

Bookmark and Share

கபாலி ரிலீஸ் குறித்து மனம் திறந்த கலைப்புலி எஸ்.தாணு!

தமிழ் சினிமா மட்டுமில்லாது உலக சினிமாவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘கபாலி’. ரஜினியின் லுக் மற்றும் அவரது ஸ்டைல் இந்த படத்தை பார்க்க ஒவ்வொருக்கும் பெரிய ஆவலை தூண்டியுள்ளது.

ஆனால், ‘கபாலி’ படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்ட நிலையிலும், படம் இன்னும் சென்சாருக்கு அனுப்பப்படவில்லை. மேலும், ரிலீஸ் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் சரிவர தெரியாததால் மிகவும் சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, உற்சாகம் தரும் வகையில் ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறும்போது, “இன்னும் ஓரிரு நாட்களில் ‘கபாலி’ படம் சென்சாருக்கு அனுப்பப்படுகிறது. சென்சார் முடிந்தபிறகே ரிலீஸ் தேதியை அறிவிப்பேன். ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ‘கபாலி’ படம் இந்த ஜுலை மாதமே வெளியாகும் என்று கூறியுள்ளார்.

அதன்படி, இன்னும் ஓரிரு நாட்களில் ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடும் என தெரிகிறது. ‘கபாலி’ ஜுலை 22-ந் தேதி வெளியாகப் போவதாக இணையதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. அந்த செய்திகள் உண்மையாகிவிடும் என்று தெரிகிறது. 


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions