எளிமையாக நடைபெற்ற கபாலி இசை வெளியீட்டு விழா!

Bookmark and Share

எளிமையாக நடைபெற்ற கபாலி இசை வெளியீட்டு விழா!

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கபாலி’. ரஞ்சித் இயக்கியுள்ள படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஜூன் 12ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்தனர்.

ஆனால், நேற்றே இப்படத்தின் ஒரு பாடல் மற்றும் ரஜினி பேசும் வசனம் ஆகியவை சமூக வலைதளத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் பாடல்களை இன்றே வெளியிட்டுள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதன் முதல் ஆடியோ சி.டி.யை சௌந்தர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். நாளை முதல் இந்த சி.டி. கடைகளில் கிடைக்கும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ரஜினி அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருவதால், இந்த விழாவில் கலந்துக் கொள்ளவில்லை. இப்படத்தின் டீசர் பல சாதனைகளை படைத்தது போல், பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!
ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா?
சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு ஒரு நெருப்புடா பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions