சாதனை படைக்கும் கபாலி பட பாடல்கள்!

Bookmark and Share

சாதனை படைக்கும் கபாலி பட பாடல்கள்!

12ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை வெளியாகும் என்று சொல்லப்பட்ட கபாலி பாடல்கள் வெளியீடு ஒரு நாள் முன்னதாக சனிக்கிழமையே அரங்கேறியது. அன்றிரவே யு டியூப் இணையதளத்தில் படத்தின் பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்ட நிலையில் உலகம் ஒருவனுக்கா பாடல் மற்றும் நெருப்புடா என்ற பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கபாலி பாடல்கள் அனைத்தும் வெளியாக யூ-டியூப் மற்றும் வலைதளங்களில் கபாலி தான் அதிகளவில் டிரெண்ட்டிங்கில் இருந்தது. கபாலி டீசரிலேயே நெருப்பாய் பரவிய நெருப்புடா பாடல் வெளியான இரண்டு நாட்களிலேயே 15 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனையைப் படைத்தது. மேலும் உலகம் ஒருவனுக்கா பாடல் 9 லட்சம் பார்வைகளையும், கடந்து சென்றிருக்கின்றது மேலும் வானம் பார்த்தேன், மாய நதி பாடல்கள் 4 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது. வீர துரந்தரா பாடல் 3 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

மேலும் கபாலி பாடல்கள் பற்றிய விமர்சனம் பலவாறாக எழுந்துள்ளது.கபாலி பாடல்களே இந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் படம் வந்தால் என்ன ஆகுமோ?.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions