வெளிநாடுகளில் 30 கோடிக்கு விற்பனையானதா கபாலி?

Bookmark and Share

வெளிநாடுகளில் 30 கோடிக்கு விற்பனையானதா கபாலி?

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘கபாலி’. இப்படத்தை ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தில் ரஜினியின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இவ்வளவு எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் இப்படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ.30 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு இப்படத்தின் வெளிநாட்டின் உரிமை இவ்வளவு தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக வெளியான செய்தி அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரஜினி இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் முகத்தில் தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தின் டீசர், டிரைலரை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions