ரஜினிக்கு சிறப்பான பிரியா விடை கொடுக்க மலேசியா ரசிகர்கள் ஆர்வம்

Bookmark and Share

ரஜினிக்கு சிறப்பான பிரியா விடை கொடுக்க மலேசியா ரசிகர்கள் ஆர்வம்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்தியா மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. அதிலும், குறிப்பாக மலேசியாவில் இவருக்கான ரசிகர்கள் ஏராளம்.

இவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நடிக்க மலேசியா சென்ற ரஜினிக்கு, மலேசியா ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்தனர்.

பலத்த பாதுகாப்புக்கு இடையே மலேசியாவில் ‘கபாலி’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்வேளையில், அவ்வப்போது தனது ரசிகர்களை காணவும் நேரம் ஒதுக்கி வருகிறார் ரஜினி.

மலேசியாவில் ‘கபாலி’ படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. விரைவில், படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பவுள்ளனர் படக்குழுவினர்.

இந்நிலையில், ரஜினியின் மலேசியா வருகைக்கு சிறப்பானதொரு வரவேற்பு கொடுத்த மலேசியா ரசிகர்கள், அவர் மலேசியாவை விட்டு கிளம்பும்போது சிறப்பான பிரியா விடை கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம். இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

‘கபாலி’ படத்தை பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions