மலேசிய ஷெட்யூல் முடிந்தது பாங்காக்கில் முகாமிட்டுள்ள கபாலி படக்குழு

Bookmark and Share

மலேசிய ஷெட்யூல் முடிந்தது பாங்காக்கில் முகாமிட்டுள்ள கபாலி படக்குழு

‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக மலேசியாவில் பரபரப்பாக நடந்து வந்தது. இங்கு பெரும்பாலான காட்சிகளை படமாக்கிய படக்குழு, அடுத்தக்கட்டமாக தாய்லாந்தில் பாங்காக் நகரில் சில காட்சிகளை படமாக்கவுள்ளனர்.

இதற்காக 2 நாள் முன்னதாகவே, பாங்காக்கிற்கு ‘கபாலி’ படக்குழுவினர் புறப்பட்டு சென்றுள்ளனர். பாங்காங்கில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டு, படக்குழுவினர் சென்னை திரும்பவுள்ளனர்.

அதன்பிறகு, கோவாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளை நடத்தவுள்ளனர். அதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஜனவரி மாதத்தில் தொடங்கி, கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்குகிறார். ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், ரித்விகா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். 


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions