இன்னும் 4 நாட்கள் கபாலி படப்பிடிப்பு பாக்கி உள்ளது - இயக்குநர் தகவல்

Bookmark and Share

இன்னும் 4 நாட்கள் கபாலி படப்பிடிப்பு பாக்கி உள்ளது - இயக்குநர் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் 'கபாலி' திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. போஸ்டர் வெளியாகி சில நிமிடங்களில் ட்விட்டர்,ஃபேஸ்புக் என்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கபாலி படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்திற்கான வெளியீடு மற்றும் தற்பொழுதைய பணிகள் பற்றி இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளதாவது, “ இன்னும் 3 முதல் 4 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருக்கிறது.

தற்பொழுது எடிட்டிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே டப்பிங் பணிகளைத் துவங்க முடிவெடுத்துள்ளோம். டப்பிங் முடிந்ததும் டீஸர் அதைத் தொடர்ந்து டிரெய்லர் வெளியிட முடிவுசெய்துள்ளோம். 

ரஜினிசாரின் ஒத்துழைப்பால் தான் இவ்வளவு சீக்கிரமாகவே இப்படத்தை முடித்திருக்கிறோம். ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இப்படம் நிச்சயம் அமையும். மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் படம் வெளியிடும் வகையில் அதற்கான வேளைகளில் இறங்கியிருக்கிறோம். 

இந்தப் படத்தில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே, ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்திருகிறார்கள். மேலும் கிஷோர், 'அட்டக்கத்தி' தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

 


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions