மலேசியா முருகன் கோவிலில் கபாலி படப்பிடிப்பு!

Bookmark and Share

மலேசியா முருகன் கோவிலில் கபாலி படப்பிடிப்பு!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கபாலி’. ‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, அடுத்தக்கட்டமாக மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். இதற்காக, படக்குழு அனைவரும் மலேசியா சென்றுள்ளனர்.

மலேசியாவில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ள படக்குழுவினர், மலேசியாவில் புகழ்பெற்ற முருகன் கோவிலிலும் முக்கியமான காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, முறையான அனுமதி கடிதம் பெறப்பட்டுள்ளது. வருகிற நவம்பர் 4-ந் தேதி அந்த ஆலயத்தில் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளனர்.

‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், ரித்விகா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். 


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions