கபாலியில் புதிய வில்லன்!

Bookmark and Share

கபாலியில் புதிய வில்லன்!

ரஜினியின் சினிமா வாழ்க்கை லிங்காவிற்கு பிறகு முற்றிலுமாக மாறுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது அவரது படங்களில் தொடர்ந்து ஒரே டெக்னீஷியன்கள், குறிப்பிட்ட சில இயக்குனர்கள் என்று இருந்து வந்த நிலை மாறி தற்போது கபாலியில் அனைத்து டெக்னீசியன்கள், நடிகர் நடிகைகள் என மாறியுள்ளனர். அதோடு, இரண்டே படங்களை இயக்கிய ரஞ்சித்துக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்த வகையில், கபாலி படத்தில் சந்தோஷ்நாராயணன் இசையமைக்க, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்ட இளவட்ட டீம் ரஜினியுடன் இணைவது முடிவான நிலையில், வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்கிற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 

அதில், பிரகாஷ்ராஜின் பெயரும் அவர்களின் பட்டியலில் இருந்தது. ஆனால், இப்போது அவருக்குப் பதிலாக பல படங்களில் வில்லன் உள்பட பலதரப்பட்ட கேரக்டர் ரோல்களில் நடித்த ஜான்விஜய் வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

தற்போது சென்னையில் கபாலி படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். மெட்ராஸ் படமெடுத்தவர் என்பதால் ஒரு செண்டிமென்ட்டுக்காக மெட்ராஸில் கபாலி படப்பிடிப்பை தொடங்கியிருப்பதாக தெரிகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions