கபாலி படத்தில் 2 தோற்றங்களில் ரஜினிகாந்த்!

Bookmark and Share

கபாலி படத்தில் 2 தோற்றங்களில் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்தின் டீசர் (முன்னோட்ட காட்சிகள்) நேற்று முன்தினம் இணையதளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரும் ரசிகர்களும் ரஜினிகாந்தின் தோற்றத்தை பாராட்டி கருத்துகள் பதிவிடுகின்றனர். டீசரை வெளியிட்ட 24 மணி நேரத்தில் 56 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது சாதனையாக கருதப்படுகிறது.

அடுத்து படம் எப்போது வெளியாகும் என்ற பரபரப்பு ரசிகர்களை தொற்றிக்கொண்டு உள்ளது. 16-ந்தேதி சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு வெளியீட்டு தேதியை முடிவு செய்யும் திட்டத்தில் படக்குழுவினர் இருக்கிறார்கள்.

இந்த மாதம் இறுதியில் பாடல்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஜூன் மாதம் ‘கபாலி’ திரைக்கு வரும் என்று ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்து உள்ளார். எனவே இசைக்கோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. அடுத்த மாதம் இறுதியில் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் இளமையாகவும் வயதானவராகவும் இரண்டு தோற்றங்களில் வருகிறார். அந்த தோற்றங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இளமைதோற்றம் 1980-களில் வந்த படங்களில் பார்த்த ரஜினியைப் போல் இருந்தது என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் கூறுகிறார்கள்.

‘கபாலி’ படத்தின் கதை ஒரு வயதான தாதாவை பற்றியது என்ற தகவல் கசிந்துள்ளது. வெளிநாடுகளுக்கு பிழைக்க சென்று சமூக விரோதிகள் பிடியில் சிக்கி அடிமைகளாக அல்லோலப்படும் தமிழர்களை வயதான தாதா ரஜினிகாந்த் எப்படி மீட்கிறார் என்பதே கதை என்று தகவல் பரவி உள்ளது. 

இளமை காலத்தில் ரவுடி தொழிலில் ஈடுபடும் அவர், பிறகு அதில் இருந்து ஒதுங்கி நல்லவனாக வாழ்வது போலவும் வயதான பிறகு மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து மீண்டும் தாதா தொழிலில் இறங்கி வில்லன் கூட்டத்தை பந்தாடுவது போன்றும் திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions