கபாலி திரைப்படத்தை எதிர்த்து ஐகோர்ட்டின் வழக்கு!

Bookmark and Share

கபாலி திரைப்படத்தை எதிர்த்து ஐகோர்ட்டின் வழக்கு!

சென்னை ஐகோர்ட்டில் ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்;-

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தை பார்க்க சென்னை பிருந்தா தியேட்டருக்கு கடந்த ஜூலை 20-ந் தேதி சென்றபோது, ஒரு டிக்கெட் ரூ.300 என்ற வீதத்தில் தியேட்டர் நிர்வாகம் விற்றது. ஆனால், அரசு நிர்ணயம் செய்த கட்டணம் ரூ.50 தான். ‘கபாலி’ படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட 4 முதல் 5 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளனர்.

இதனால், அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து ரூ.250 கோடிக்கு மேல் தியேட்டர் உரிமையாளர்கள் சுருட்டியுள்ளனர். எனவே, அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று முந்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து கலெக்டர்களுக்கும் ஆன் – லைன் மூலம் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

பின் நீதிபதி, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தது எல்லாம் சிறிய தியேட்டர்கள் மீது தான். அதிகாரிகள் பெரிய தியேட்டர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? சினிமாக்காரர்களுக்கு மட்டும் என்ன தனிச்சட்டமா? பெரிய நடிகர்கள் நடித்த படம் என்றால் அனைத்து விதிகளும் மீறப்பட்டுவிடும்.

அதிகாலை 3 மணி, 4 மணிக்கெல்லாம் தியேட்டர்களில் திரைபடம் வெளியானது. இதற்கு எப்படி அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள்? பெரிய நடிகர்களின் படத்துக்கு இலவசமாக டிக்கெட்டுகள் கிடைப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்து விடுகின்றனரா?

அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட அதிகம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து அவர்களது கருத்துகளை கேட்டு, டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவேண்டும். ரூ.120 டிக்கெட்டை ரூ.500, ரூ.700, ரூ.1,000 என்று விற்பனை செய்வது ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும். அரசு அதிகாரிகளுக்கு மட்டும் தெரியவில்லையா?

எனவே, அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர் நிர்வாகம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று அரசு விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணையை அக்டோபர் 21-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions