ஏவிஎம் பிள்ளையாரை வணங்கிவிட்டு தொடங்கும் கபாலி

Bookmark and Share

ஏவிஎம் பிள்ளையாரை வணங்கிவிட்டு தொடங்கும் கபாலி

ரஜினி நடித்த பெரும்பாலான படங்களின் படப்பிடிப்புகள் சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் தான் நடந்துள்ளது. குறிப்பாக, அங்குள்ள பிள்ளையார் கோயிலில் பூஜை நடத்தி விட்டு எங்கு வேண்டுமானாலும் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவார் ரஜினி.

அப்படி ஏவிஎம் பிள்ளையாரை வணங்கி விட்டு தனது படங்களை ஆரம்பித்தால் வெற்றி உறுதி என்பது ரஜினியின் நீண்டகால நம்பிக்கையாகும்.

தற்போது, ரஞ்சித் இயக்கத்தில் தான் நடிக்கும் கபாலி படத்தின் பூஜையையும் ஏவிஎம் பிள்ளையார் கோயிலில் தொடங்கி, செண்டிமென்டாக ஒரு காட்சியை அங்கு படமாக்கி விட்டு அதன்பிறகு வேறு பகுதியில் படமாக்குங்கள் என்று கூறியுள்ளாராம் ரஜினி. எனவே சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோ பிள்ளையாரை வணங்கி விட்டு கபாலியை தொடங்கப்போகிறார் ரஞ்சித். 

செப்டம்பர் 17-ந்தேதி மலேசியாவில் கபாலி படப்பிடிப்பு நடைபெறுவதாக இருந்த நிலையில், அந்த நாளில் ரஜினியின் இந்த முடிவு காரணமாகத்தான், வருகிற 17-ந்தேதி மலேசியாவில் நடத்த இருந்த கபாலி படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடிவு செய்தார் டைரக்டர் ரஞ்சித்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions