கபாலிக்காக பண்ணைவீட்டில் தங்கும் ரஜினி !

Bookmark and Share

கபாலிக்காக பண்ணைவீட்டில் தங்கும் ரஜினி !

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ராதிகா ஆப்தே, பிரகாஷ்ராஜ், கிஷோர், தன்ஷிகா உள்பட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ரஜினிகாந்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கபாலி படத்தின் முதல் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ரஷ்யன் கல்ச்சுரல் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சில நாட்கள் இங்கு படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த பிறகு கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

இந்த ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெறும்போது கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணைவீட்டில் தங்கி, அங்கிருந்து படப்பிடிப்புக்கு வர திட்டமிட்டுள்ளாராம் ரஜினி. போயஸ்கார்டன் வீட்டிலிருந்து கிளம்பி வந்தால் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல மணி நேரங்கள் விணாகும் என்பதால் இந்த ஏற்பாட்டை செய்து கொண்டாராம் ரஜினி. 

கிழக்குக் கடற்கரைச்சாலை ஸ்டுடியோவில் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு பெங்களுர் சாலையில் அமைந்துள்ள ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அப்போது அங்கேயே தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளர் ரஜினி.


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions