மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் கபாலி!

Bookmark and Share

மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் கபாலி!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி திரைப்படம மலாய் மொழியில் டப் செய்யப்படுகிறது. இதன் மூலம் மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை கபாலி பெறுகிறது.

ரஞ்சித் இயக்கத்தில், தாணு தயாரிக்கும் கபாலி படத்தில் ரஜினி மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு படம் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்தப் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்தில் நடந்துள்ளது. மலேசியாவில் கபாலி ரஜினியைக் காண பல ஆயிரம் ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மட்டும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலாய் மக்கள் உள்ளனர். இந்த மக்கள் கபாலியை தங்கள் கண்டு களிக்க வசதியாக கபாலியை மலாய் மொழியில் டப் செய்ய முடிவு செய்துள்ளனர்.

ரஜினியின் முத்து படம்தான் முதல் முறையாக வெளிநாடுகளில் அதுவும் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்ட முதல் இந்தியப் படமாகும்.

அதன் பிறகு இப்போது அவரது கபாலி படம் மலாய் மொழியில் முதல் முறையாக டப் செய்யப்படுகிறது. இதற்கு முன் வேறு எந்த இந்திய, தமிழ்ப் படமும் மலாயில் டப் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions