கபாலி உரிமைக்கு போட்டி போடும் பிரபல நிறுவனங்கள்!

Bookmark and Share

கபாலி உரிமைக்கு போட்டி போடும் பிரபல நிறுவனங்கள்!

லிங்கா படத்தில் பொய்க் கணக்கு காட்டி லாபம் பார்த்தும் ,  சரியாகப் போகவில்லை என்று கூறிய அத்தனை பேரும் இப்போது கபாலியை வாங்க வரிசை கட்டி நிற்கின்றனர். ஒன்று, இரண்டு பேரில்லை 30 பேர். இதில் லிங்கா மீது அவதூறு பரப்பியவர்களும் அடங்குவர்.

ஏற்கெனவே இந்தப் படத்தின் அமெரிக்க உரிமையை பெரும் விலைக்கு விற்றிருக்கிறார் தாணு. 300-க்கும் அதிகமான அரங்குகளில் கபாலி தமிழில் வெளியாகப் போகிறது. தெலுங்கிலும் படம் வெளியாகவிருக்கிறது.

அமெரிக்க உரிமை விற்பனையான செய்தி வெளியான அடுத்த கணத்திலிருந்து தமிழ் பதிப்பை வெளியிடும் உரிமையைக் கேட்டு 30 நிறுவனங்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போடுகிறார்களாம். 

தயாரிப்பாளர் தாணுவுக்கு இது மிகப் பெரிய திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. "ரஜினி எப்பவுமே அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார்ங்க. அவர்தான் பாக்ஸ் ஆபீஸின் நிரந்த சக்கரவர்த்தி என்பதை நானே கண்கூடாக உணர்கிறேன், 35 ஆண்டுகள் காத்திருந்ததற்கு கிடைத்த மெகா ஜாக்பாட் இது!" என்கிறார் தாணு. 


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions