கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது

Bookmark and Share

கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது

ரஜினி தற்போது நடித்து வரும் படம் ‘கபாலி’. இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்து வருகிறார். மேலும் கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. சென்னை விமான நிலையத்தில் சில காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதையடுத்து அடுத்த கட்டமாக படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் மலேசியா சென்றிருக்கின்றனர். மலேசியாவை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. இதில் மலேசியாவில் ரஜினி தன்னுடைய அடியாட்களுடன் ஒருவரை சித்ரவதை செய்வது போல் காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.

மலேசியாவில் முக்கியமான காட்சிகளை படமாக்கிய பிறகு அடுத்தகட்டமாக தாய்லாந்து செல்ல படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படப்பிடிப்பில் ராதிகா ஆப்தே கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். கலைப்புலி தாணு இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். 


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions