தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!

Bookmark and Share

தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட் படமான கபாலி, தாய்லாந்து மொழியில் 100-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகிறது. கலைப்புலி தாணு தயாரிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் கபாலி. ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வசூலை உலகெங்கும் குவித்து பெரும் வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியானது. மூன்று மொழிகளிலுமே இது வெற்றிப் படம்தான். ஒரு வாரம் கழித்து மலாய் மொழியில் டப் செய்யப்பட்டு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் 600-க்கும் அதிகமான அரங்குகளில் வெளியானது கபாலி. இன்று வரை மலேசியாவில் அதிக வசூல் குவித்த ஒரே ஆசிய திரைப்படம் கபாலிதான்.

கபாலியை தாய், ஜப்பான் மற்றும் சீன மொழிகளில் டப் செய்து வெளியிடப் போவதாக முன்பு கலைப்புலி தாணு அறிவித்திருந்தார்.இப்போது முதல் கட்டமாக கபாலியின் தாய்லாந்து மொழிப் பதிப்பை வரும் ஜனவரி 5-ம் தேதி வெளியிடவிருக்கிறார்.

தாய்லாந்தில் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கபாலி வெளியாகவிருக்கிறது. தாய் மொழியில் டப் செய்யப்பட்டு இத்தனை அரங்குகளில் வெளியாகும் ஒரே இந்தியப் படம் கபாலிதான் என்பது குறிப்பிடத்தக்கது. கபாலி தாய்லாந்து வெளியீட்டை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் உறுதி செய்துள்ளார்.


Post your comment





Related News
மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?
சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்
கபாலி தோல்வியா? திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!
கபாலி திரைப்படத்தை எதிர்த்து ஐகோர்ட்டின் வழக்கு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions