இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!

Bookmark and Share

இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி!

இப்போதெல்லாம் ஒரு படத்தின் வெற்றி முன்பு போல நூறு நாட்கள் ஓடுவதை வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. பத்தே நாட்கள் என்றாலும் போட்ட பணத்தை திரும்ப எடுத்துவிட்டால் போதும். அதுதான் சினிமா வர்த்தகத்தின் இப்போதைய உத்தி. இந்த உத்தியை முதலில் ஆரம்பித்ததே ஒரு ரஜினி படத்திலிருந்துதான்.

அந்தப் படம் சிவாஜி த பாஸ்.இன்றுள்ள பலதரப்பட்ட பொழுதுபோக்குச் சூழலில் ஒரு படம் நூறு நாட்கள் வரை ஒரே தியேட்டரில் ஓடுவது சாத்தியமில்லாத சமாச்சாரம் ஆகிவிட்டது. பெருமைக்காக சில படங்களை ஒற்றைக் காட்சிகளாக ஓட்டி விழா எடுப்பதை சில நடிகர்கள் தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள்.

இந்த 2016-ம் ஆண்டு 200-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின. இவற்றில் சில படங்கள் நூறு நாட்களைத் தொட்டன. ஆனால் எந்தப் படமும் நூறு நாட்களைத் தாண்டவில்லை. ரஜினியின் கபாலி மட்டுமே சென்னையில் மூன்று அரங்குகளில் நூறு நாட்களைத் தாண்டியது.

மதுரை மணி இம்பாலா அரங்கில் 150 நாட்களைத் தாண்டி ஓடியது. நூறு நாட்கள் ஓடிய படங்கள் லிஸ்ட்டில் தெறி, இறுதிச் சுற்று, ரஜினி முருகன் போன்றவை இடம்பிடித்துள்ளன.


Post your comment





Related News
2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்
இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ!
தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி!
கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை!
கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ!
கபாலி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல்!
கபாலி திரைப்படத்தை எதிர்த்து ஐகோர்ட்டின் வழக்கு!
கபாலி படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது என்ன நடவடிக்கை: ஐகோர்ட்டு கேள்வி
இணையதளத்தில் வெளியான கபாலி!
கபாலி 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions