கபாலி ரிலீஸின் போது ரஜினியின் பிளான் இதுதான்!

Bookmark and Share

கபாலி ரிலீஸின் போது ரஜினியின் பிளான் இதுதான்!

கபாலி படத்தை முடித்த கையோடு ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த், ஷங்கர் இயக்கும் 2.o படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிறிது காலம் படப்பிடிப்பில் இருந்து ப்ரேக் எடுத்துவிட்டு குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

அதேநேரத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2.o படத்துக்கான மேக்கப் டெஸ்ட்டிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். கடந்த வாரமே இவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, அவர் இம்மாத இறுதியில்தான் சென்னை திரும்புவாராம். எனவே கபாலி ரிலீஸின் போது ரஜினி அமெரிக்காவில்தான் இருப்பார் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions