கார்களை கலக்கும் ரஜினியின் கபாலி ஸ்டிக்கர்ஸ்!

Bookmark and Share

கார்களை கலக்கும் ரஜினியின் கபாலி ஸ்டிக்கர்ஸ்!

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் ரஜினி நடித்த கபாலி. ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என்று தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் கபாலி ஜூரம் பற்றிக்கொண்டு உள்ளது.

ஒருபுறம் ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவரின் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க அலைமோதிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொருபுறம் கபாலி குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கபாலி குறித்த உரையாடல்கள் இல்லாத இடமே இல்லை என்று எங்கும் கபாலி பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது.

ஏர் ஆசியா நிறுவன விமானத்தில் ரஜினியின் கபாலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் சிறப்பு பரிசாக கபாலி படம் பார்ப்பதற்கான டிக்கெட்டுகளை தங்கள் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. சில நிறுவனங்கள் கபாலிக்காக ஒருநாள் விடுமுறையே அளித்து உள்ளன. 

இப்படி பல எதிர்பார்ப்புகள், களேபரங்கள், உற்சாக கொண்டாட்டங்கள் மத்தியில் நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் தியேட்டர்களில் கபாலி திரையிடப்படுகிறது. இன்னும் ஒரே நாள்... தமிழகம் முழுவதும் ரசிகர்கள் தங்கள் கவுண்ட்டவுனை ஏற்கனவே தொடங்கி கபாலியை வரவேற்கத்தொடங்கி விட்டனர்.

ஈரோடு ரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசமாக தங்கள் கார்களையே கபாலி ரஜினியின் படத்தை அலங்காரம் செய்து கலக்கி வருகிறார்கள். ஈரோடு பழையபாளையத்தில் கார் அலங்காரக்கடை வைத்து இருக்கும் பிரபு என்பவர் கூறியதாவது:-

என்னிடம் கார் அலங்காரம் செய்ய வரும் 4 கல்லூரி மாணவர்கள் தங்கள் கார்களை கொண்டு வந்து ஏர் ஆசியா விமானத்தில் ஒட்டி இருப்பதுபோன்று கபாலி ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று கூறினார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்டிக்கர் ஒட்டினேன். பார்க்கவே பிரமாண்டமாக இருந்தது. 

இதைப்பார்த்த பலரும் ஆர்வமாக வந்து, தங்கள் கார்களுக்கு கபாலி ஸ்டிக்கர் ஒட்டிச்செல்கிறார்கள். பிறகு இந்த ஸ்டிக்கரை எடுத்து விட்டாலும் காருக்கு பெயிண்ட் உள்பட எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே கார் உரிமையாளர்கள் அச்சமின்றி உற்சாகமாக தங்கள் கார்களில் ரஜினி படங்களை ஒட்டிச்செல்கிறார்கள் என்றார்.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட என் டைட்டில் மோசமா? கொந்தளித்த இயக்குனர்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா?
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?
பாலியல் தொந்தரவை சொன்னால் எதிர்காலம் வீணாகிவிடும் : ராதிகா ஆப்தே
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
கபாலியை பின்னுக்கு தள்ளிய மெர்சல் - பிரம்மிக்க வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions